சென்னை மெளலிவாக்கத்திலுள்ள மற்றொரு கட்டடத்தை அடுத்த மாதம் 16ஆம் தேதிக்குள் இடிக்க வேண்டும் என சிஎம்டிஏவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

280

சென்னை மெளலிவாக்கத்திலுள்ள மற்றொரு கட்டடத்தை அடுத்த மாதம் 16ஆம் தேதிக்குள் இடிக்க வேண்டும் என சிஎம்டிஏவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜீன் 28ஆம் தேதி சென்னையை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில் 11 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டுமான பணியின்போதே இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும், இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அருகேயுள்ள மற்றொரு 11 மாடி கட்டிடத்தை இடிக்கவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மௌலிவாக்கத்தில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடத்தை இடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் நடைபெறும் இந்த பணியை முடிக்க 20 நாட்கள் கால அவகாசம் தேவை என கோரப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கட்டிடத்தை இடிக்கும் பணியை செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் முடிக்கவேண்டும் எனவும், அதன்பின்னர், அதுதொடர்பான அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.