சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மோனோ ரயில் திட்டம்… 3 ஆயிரத்து 267 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு.

323

சென்னையில் ஆறாயிரத்து 402 கோடி ரூபாயில் போரூர்-வடபழனி, வேளச்சேரி-வண்டலூர் வழித்தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என போக்குவரத்து மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் போக்குவரத்து துறை மானிய கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு, மோனோ ரயில் திட்டத்தை 43 புள்ளி 48 கிலோ மீட்டர் தொலை தூரத்திற்கு இருதிட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
முதல் கட்டமாக, பூந்தமல்லி முதல் கத்திப்பாரா வரை இணைப்புடன் போரூரில் இருந்து வடபழனி வரை 20 புள்ளி 68 கிலோ மீட்டர் தூரத்திற்கு மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். தனியார் பங்களிப்புடன் மூவாயிரத்து 267 கோடி ரூபாய் நிதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். இரண்டாம் கட்டமாக, மூவாயிரத்து 135 கோடி ரூபாயில்,
பேரவையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் சென்னையில் மோனா ரயில் திட்டம் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். கத்திபாரா முதல் பூந்தமல்லி, போரூர் முதல் வடபழனி, வேளச்சேரி முதல் வண்டலூர் வரையிலான மூன்று வழி தடங்களில் மோனா ரயில் திட்டம் கொண்டுவரப்படுவதாக அவர் தெரிவித்தார். முதல் கட்டமாக போரூர் முதல் வடபழனி , வேளச்சேரி முதல் வண்டலூர் 43. 48 கிலோ மீட்டர் தூரம் வரையிலான திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். இதற்காக 3 ஆயிரத்து 267 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.