தொழிலாளர் நல வாரியம் குறித்த ஆய்வு கூட்டம் : அமைச்சர் நிலோபர் கபில் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்பு

310

தொழிலாளர் நல வாரிய செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தும் நல திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் நிலோபர் கபில் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில்,நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தொழிலாளர் கல்வி உதவித்தொகை 6 ஆயிரமாக வழங்கப்பட்டதை 12 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியும், திருமண உதவித்தொகையை ஆண்களுக்கு 5000 ரூபாய், பெண்களுக்கு 10,000 ரூபாய் ஆக உயர்த்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா, தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்