சிக்னல் கோளாறு காரணமாக, மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு..!

106

சிக்னல் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்களும், பயணிகளும் அவதியடைந்துள்ளனர்.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல், தாங்கள் விரும்பும் சுற்றுலா தளங்களுக்கு சென்றுவர பெரிதும் பயன்பட்டு வருகிறது. வாரவிடுமுறை நாட்களில், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னை வண்ணாரப்பேட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த சிக்னல் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறை சீர் செய்யும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, பொதுமக்கள், பயணிகள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.