தென் கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்லை மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

453

தென் கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்லை மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள வாயு புயலால், தென் தமிழக கடலோர பகுதிகளான தனுஷ்கோடி முதல் குளச்சல் வரையிலான பகுதிகளில் அதிகளவில் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்டம் கடற்கரை கிராமங்களான பெருமணல், பஞ்சல், உவரி, கூட்டபனை, கூடுதாழை ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 2-வது நாளாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், கடற்கரையில் ஏராளமான நாட்டு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன் பிடிக்க செல்லாததால் வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்.