மெரினாவில் போராட்டம் நடத்த அரசு விதித்த தடை சரியானது என தீர்ப்பு..!

191

மெரினாவில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி, விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ராஜா, ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி அளித்திருந்தார். இதனை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், மெரினாவில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, மேலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அரசு விதித்த தடை சரியானது என தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், இனி ஒருபோதும், மெரினாவில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.