சென்னையில் தூய்மை பணியை மேற்கொள்ளும் வகையில் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

209

சென்னை மெரினா கடற்கரையில் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் வகையில் தனியார் அமைப்பு சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். உழைப்பாளர் சிலையில் இருந்து தொடங்கிய இந்த பேரணி காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.

சென்னையில் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் அமைப்பு சார்பில் ஜூன் 16ம் தேதி தொடங்கிய தூய்மை பணியானது வரும் 30ம் தேதி நிறைவடைகிறது.