சென்னை மெரினா கடற்கரையில் புவி வெப்பமயமாதலை தடுக்க அமைதி பேரணி! நடிகர் விவேக் பங்கேற்றார்!!

241

சென்னை, ஜூலை 24:–
சென்னை, மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே புவி வெப்பமயமாதல் விழிப்புணர்வையும், அப்துல்கலாமின் முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணி நடைபெற்றது.
மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே இன்று கிரீன் கலாம் அமைதிப் பேரணி நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாண்டு நிறைவு மற்றும் புவி வெப்பமயமாதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த அமைதிப் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கையில் வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பாதகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரி சஞ்சய் அரோரா மற்றும் நடிகர் விவேக் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். மேலும் நிகழ்ச்சியில் நடிகர் விவேக் பேசியதாவது:–
இந்தியாவில் புவி வெப்பமயமாதல் அதிகரித்து கொண்டு வருகிறது. இதை நாம் மரங்கள் நடுவது மூலமே கட்டுப்படுத்த முடியும். மேலும் இந்தியா முழுவதும் 1 கோடி மரங்களை நட திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.