மார்க்கெட் பகுதியில் 3வது முறையாக பழக்கடைகள் மற்றும் காய்கறி கடைகள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

192

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள மார்க்கெட்டில், 50 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இங்கு பழங்கள், காய்கறிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பகுதியில் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி தீ விபத்து நடப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 15 கடைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தியதாக தெரிகிறது. இதில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.
இதனையடுத்து அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்களையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக தெரிகிறது.
குடியிருப்பு வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவில் மர்ம நபர் ஒருவர் வாகனங்களுக்கு தீ வைப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.