ஜனவரி 7-ஆம் தேதி சென்னையில் மகாபலிபுரம் சாலையில் ஜல்லிக்கட்டு !

558

ஜனவரி 7-ஆம் தேதி சென்னை மகாபலிபுரம் சாலையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 1976 ஆம் ஆண்டுக்கு பின் சென்னை மகாபலிபுரம் சாலையில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதாக கூறினார். இதில் 350 காளைகளை பிடிக்க 375 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறினார். தமிழக அரசின் உரிய அனுமதி பெற்று நடத்தப்படும், இந்த போட்டியில் வீரர்கள், 5 அணிகளாக பிரிந்து மாடுகளை பிடிப்பார்கள் என்றார். மாநிலம் முழுவதிலும் இருந்த தலைசிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் கலந்துகொள்ளும் இப்போட்டி வரும் ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும் என ராஜசேகர் தெரிவித்தார்.