மனைவியை அடித்து கொன்று விட்டு மூச்சு திணறி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவன் கைது!!

315

சென்னை அன்னை சத்தியா நகரில் மனைவியை அடித்து கொன்று விட்டு மூச்சு திணறி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.

சென்னை தீவுத்திடல் எதிரே அமைந்துள்ள அன்னை சத்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை என்ற குட்டி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த பாலா என்னும் பெண்ணுக்கு திருமணமாகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் குட்டியும், பாலாவும் ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக வசித்து வந்தனர். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. குட்டி வீட்டிற்கு வந்தபோது பாலா மூச்சு திணறி உயிரிழந்து விட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் பாலா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து குட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குட்டிக்கும், பாலாவுக்கும் மது போதையில் ஏற்பட்ட தகராறில் குட்டி ஆத்திரத்தில் தான் வைத்திருந்த கத்தியால் பாலாவின் கை மற்றும் கால்களில் வெட்டியதுடன், தலையணையால் பாலாவின் முகத்தில் வைத்து அழுத்தியதாகவும், இதில் மூச்சு திணறி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து குட்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதிவாசிகள் இடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.