சென்னை வியாசர்பாடி வக்கீல் கொலையில், 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

187

சென்னை : வியாசர்பாடி, மெக்சின்புரத்தை சேர்ந்தவர் வக்கீல் ரவி. இவர் நேற்று காலை 10 மணி அளவில், நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது 9 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு, ஆட்டோவில் தப்பிச் சென்றது. ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, உதவி ஆணையாளர் மன்னர் மன்னன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கொடுங்கையூரில் கொலை கும்பல் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது ஒருவன் தப்பி விட்டான்.

பின்னர், போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது வக்கீல் ரவியின் மிரட்டலாலும், தொந்தரவினாலும் இந்த கொலைசம்வம் நடந்ததாக கூறப்படுகிறது.
கொலை சம்பவம் நடந்து முடிந்த 12 மணி நேரத்தில், தனிப்படையினர் கொலையாளிகளை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.