சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர்.

201

சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின், உடல்நலம் பற்றி பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற அவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி மருத்துவர்கள், தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழு உடல் நலம் பெற டுவிட்டரில் அருண் ஜெட்லி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோன்று, பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவும் முதலமைச்சர் முழு உடல் நலம் பெற பிரார்த்திப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.