சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீஸ் வழக்கு பதிவு !

930

சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க, மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையினர், ராஜஸ்தான் சென்றனர். அங்கு, கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில், கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகரனின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில்தான் பெரியபாண்டியன் மரணமடைந்ததாக ராஜஸ்தான் எஸ்பி தீபக் பார்கவ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பு ஏற்படுத்தியதாக முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.