சென்னையை சேர்ந்த 3 அதிகாரிகள் உள்பட மூத்த வருமான வரித்துறை அதிகாரிகள் 9 பேர் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது.

210

டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் உட்பட 17 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனையில், 2 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கான ஆவணங்கள், 16 லட்ச ரூபாய், நான்கு கிலோ தங்க நகைகள், 13 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும், மற்றொரு அதிகாரியின் இல்லத்தில், 68 லட்ச ரூபாய்க்கான நிரந்தர வைப்புநிதிக்கான ரசீதுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சோதனை அடிப்படையில், ஊழல் நடைமுறைக்கு துணை போனதாக டெல்லி வருமான வரித்துறையின் முதன்மை கமிஷனர் எஸ்.கே.மிட்டல், சென்னையை சேர்ந்த முரளிமோகன், விஜயலட்சுமி மற்றும் ஹரூண் பிரசாத் உள்பட 9 மூத்த வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் 3 தனிநபர் மீது சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.