இலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..!

128

டீசல் மற்றும் மின்சாரம் என இரு வகையில் ஓடும் ரயில் பெட்டி தயாரிக்கும் பணி சென்னை ஐ.சி.எப்.பில் நிறைவு பெற்றது. #india #train #icf

சென்னை வில்லிவாக்கத்தில் ஐ.சி.எப். ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 1971ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளுக்கு ரயில் பெட்டிகள் தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தநிலையில், ரைட்ஸ் நிறுவனம் மூலம் இலங்கைக்கு இரு புறமும் இயங்கக் கூடிய 6 டீசல் மின் தொடர் ரயில்கள் தயாரிக்கும் பணி ஐ.சி.எப் நிறுவனத்திற்கு கிடைத்தது.

முதல் கட்டமாக, 2 குளிர்சாதன பெட்டி, 2 உயர் வகுப்பு பெட்டிகள் மற்றும் 7 இரண்டாம் வகுப்புகளுடன் கூடிய 13 ரயில் பெட்டிகளை கொண்ட டீசல்மின் தொடர் வண்டி தயாரிக்கப்பட்டது. இதனை ரைட்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் நடைபெற்றது. இதில் ஐ.சி.எப். பொது மேலாளர் மணி, செயலாளர் கே.எம். பாபு உள்ளிட்ட பல கலந்து கொண்டார்.