சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆதிநாதன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

186

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆதிநாதன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் எளிமையாக நடைபெற்ற விழாவில், நீதிபதி ஆதிநாதனுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். நீதிபதியாக ஆதிநாதன் பதவியேற்றதை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஆதிநாதன் சென்னை முதன்மை அமர்வு செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர் ஆவார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணியிடங்களில் தற்போது 36 பணியிடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.