தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைகழக மருத்துவ கல்லூரிகளில் ஆண்டுக்கு 13 லட்சம் மட்டுமே வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜவஹர் என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ் மற்றும பி.டி.எஸ் படிப்புகளில் சேர்க்க தனியாக நன்கொடை வசூல் செய்யப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை தவிர்த்து, 80 லட்சம் வரை நன்கொடை சூலிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஆண்டுக்கு அதிகபட்ச கட்டணமாக 13 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வீதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், ஆணையிட்டுள்ளது. மேலும் கட்டண நிர்ணயம் தொடர்பாக குழுவை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.