தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை …!

384

தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகைகள் வைப்பதால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்துக்கள் அதிகரிப்பதால், இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கோவை நுகர்வோர் மையம் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு, தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுவரை வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களின் காலம் முடிவடைந்த பிறகு, அதனை மீண்டும் புதுப்பிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.