தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது..!

239

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் பழனிச்சாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் விலக்கிக்கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார். இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், எந்த கட்சியிலும் தாங்கள் சேராமல் இருக்கும் நிலையில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் நடவடிக்கை எடுத்தது செல்லாது என அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில், ஆளுனர், சபாநாயகர், முதலமைச்சர் மற்றும் தினகரன் தரப்பு எம்எல்ஏ-க்கள் சார்பில் பிரபல மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடி வருகின்றனர்.