மணல் குவாரிகள் மீதான தடை தொடரும் -சென்னை உயர்நீதிமன்றம்!

289

மணல் குவாரிகளை மூடுவதற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை, தமிழகத்தில் விற்பதற்கு அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், கடந்த நவம்பர் 29ம் தேதி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் படிப்படியாக 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், மணல் குவாரிகள் மீதான தடை தொடரும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.