சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இன்று காலை வெயில் தலை காட்டியது. ஆனால் பகல் வரை மட்டுமே வெயில் நீடித்ததது. பிற்பகலுக்கு மேல் மீண்டும் மழை பெய்து வருகிறது.. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சென்ட்ரல் , கிண்டி, மயிலாப்பூர் திருவொற்றியூர், உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.