சென்னையில் மீண்டும் கனமழை : சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு …!

738

சென்னையில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை துவங்கியதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று மழை சற்று தணிந்து காணப்பட்டது. இந்நிலையில், ஆயிரம் விளக்கு, அடையாறு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, மந்தைவெளி ஆகிய பகுதியில் மீண்டும் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. புழல், செங்குன்றம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அலுவலகம் செல்வோர், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை வரை கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.