சென்னையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி கல்லூரி மாணவன்பலி.

290

சென்னையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிராட்வேயிலிருந்து 120 தடம் எண் கொண்ட அரசு பேருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தது. திருமுல்லைவாயல் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மதுபான கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் மாணவன் எஸ்வந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.