சென்னை அருகே பூட்டிய வீட்டிற்குள் புகுந்து 75 சவரன் நகை கொள்ளை..!

342

சென்னை அருகே பூட்டிய வீட்டிற்குள் புகுந்து 75 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோழிங்கநல்லூர் அடுத்த பனையூர் பகுதியில் வசித்து வரும் ராசூல் பேகம், புதுச்சேரியில் உள்ள அண்ணன் வீட்டில் கடந்த 4 மாதங்களாக தங்கியுள்ளார். இவர் தன் மகளின் திருமணத்திற்காக நகை மற்றும் பணமும் சேர்த்து வைத்துள்ளார். இந்தநிலையில், வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 75 சவரன் தங்க நகை மற்றும் 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம், உயரக செல்போனையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை கேள்விபட்ட ராசூல் பேகம் மற்றும் அவரது அண்ணனும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்ததின் பேரில், கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.