திருச்சி விமான நிலையங்களில் 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

324

சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது.

திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த நபரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருடைய சட்டைப் பைக்குள் 1 கிலோ 170 கிராம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் இருப்பது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தங்கக் கட்டிகள் சிங்கப்பூரிலிருந்து திருச்சி மூலமாக சென்னைக்கு கடத்தி வரப்பட்டதாக ஒப்புக்கொண்டார். அவரிடம் மேற்படி விசாரணையை சுங்கத் துறையினர் முடுக்கி விட்டுள்ளனர். கடத்தல் தங்கத்தின் சர்வதேச மதிப்பு 38 லட்ச ரூபாயாகும்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது திருவாரூரை சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவர் மறைத்து வைத்திருந்த 100 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு 3 லட்ச ரூபாயாகும்.