தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும், தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணத் தொகையை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றும் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

80

சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிகத்தில் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தமிழக அரசு அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். ஆனால் 139 விவசாயிகள் இதுவரை உயிரழந்திருப்பதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கவேண்டும் என்று ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில், நெல் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயும், கரும்பு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாயும் தமிழக அரசு வழங்கவேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.