சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி தரப்படும் என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை பெசன்ட் நகரில் வேளாங்கண்ணி ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள குப்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் உள்ளன. நேற்றிரவு ஒரு மணி அளவில் இங்கு ஒரு குடிசையில்தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ
மற்ற குடிசைகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர்
பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில், 70 க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் கருகி நாசமாயின. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமடைந்துள்ளன. இதனால் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகள் மற்றும் இழந்து தவிக்கின்றன.தீ விபத்தில் நாசமடைந்த குடிசைகளை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகரும் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். குடிசைகளை இழந்தவர்களுக்கு மாற்று வீடு ஒதுக்கி தரப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார்
உறுதி அளித்துள்ளார்.