ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தல்…. திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

224

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையிலுள்ள, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தாயரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு, நடிகர்கள் ராதாரவி, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரைப்படத் துறையின் பல்வேறு சங்கங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.