சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஜெட் ஏர்வேஸ் மற்றும் இன்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

391

சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஜெட் ஏர்வேஸ் மற்றும் இன்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் 275 பயணிகளுடன் நேற்று துபாய் நோக்கிச் சென்றது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில், விமானத்தை தரையிறக்க முயன்றபோது, விமானத்தின் முன்பகுதி தரையில் உரசியதால் இன்ஜினில் திடீரென தீப்பிடித்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்ட விமான நிலைய ஊழியர்கள், பயணிகள் மற்றும் சிப்பந்திகளை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தை தொடர்ந்து துபாய் விமான நிலையம் மூடப்பட்டு அங்கு வரும் விமானங்களை அனைத்து வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இந்தநிலையில், விமான விபத்து காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஜெட் ஏர்வேஸ் மற்றும் இன்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் துபாய் செல்ல இருந்த பயணிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.