சென்னை மாநகரம் விரிவாக்கம் : 3 மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகள் சென்னையுடன் இணைப்பு ..!

1030

சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் மேலும் சில பகுதிகள் இணைக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகள் சென்னையில் இணைக்கப்படுகின்றன.
இதன் மூலம் சென்னை முதல் அரக்கோணம் வரை 8 ஆயிரத்து 878 சதுர கிலோ மீட்டர் பகுதிகள் ஒருங்கிணைந்து நகர்மயம் ஆவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அரக்கோணம், நெமிலி தாலுக்காக்கள் சென்னை பெருநகர குழுமத்தில் இணைக்கப்படுகின்றன.
எல்லை விரிவாக்கம் மூலம் ஆயிரத்து 709 கிராமங்கள் சென்னை எல்லைக்குள் வருவது குறிப்பிடத்தக்கது.