சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில், இருப்பு பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

284

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில், இருப்பு பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் ஐந்து மற்றும் ஆறாவது நடை மேடையில் இருப்பு பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று முதல் ஆறு நாட்களுக்கு இந்தப் பணிகள் நடைபெறுவதால், சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மாநகர பேருந்து மூலம் இலவசமாக பேசின் பிரிட்ஜ் வரை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐந்து மற்றும் ஆறாவது நடைமேடையில் நின்று செல்லும், ரயில்கள், கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.