சென்னையில் பஸ் டே கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்..!

157

சென்னையில் பஸ் டே கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடினர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கீழ்ப்பாக்கம் போலீசார் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் ஒன்பது பேரை பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் கல்லூரி முதல்வரின் அனுமதியின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையக்கூடாது எனவும் உ த்தரவிட்டுள்ளது.