பொது இடங்களில் உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர்களை வைக்க தடை-சென்னை உயர்நீதிமன்றம்

510

பொது இடங்களில் உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர்களை வைக்க தடைவிதித்து 1280px-Flex_board_of_J_Jayalalitha_in_Chennai_2உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், அரும்பாக்கத்தை சேர்ந்த திரிலோக்சனா குமாரி, பொது இடங்களில் பேனர் வைப்பதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தபோது, பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உயிரோடு இருப்பவர்களுக்கு தேவையில்லாமல் கட் அவுட், பேனர் வைக்கக்கூடாது என்று நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.
உயிரோடு இருப்பவர்களின் புகைப்படத்தையும் பேனர்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
பேனர், கட் அவுட் வைப்பது தொடர்பாக 1959-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி வைத்தியநாதன் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றிக்கை அனுப்ப, தலைமை செயலாளருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.