உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி. சென்னையில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

253

உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைத்துறை சார்பில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி மெரினா கடற்கரையில் பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் தலைவர் டேவிடர் ஐ.ஏ.எஸ். தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் அரசு பல்நோக்கு மருத்துவக்கல்லூரி மற்றும் கஸ்தூரி பா காந்தி பொதுமருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.