தமிழக மக்களின் வாழ்வு மேம்பட சென்னையிலுள்ள ஐயப்பன் கோயிலில் தொடர்ந்து 5 மணிநேரம் ருத்ர யாகம் நடைபெற்றது.

276

சென்னை, அண்ணாநகரில் பிரசித்திபெற்ற ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இங்கு முதன்முறையாக 150 அர்ச்சகர்களை கொண்டு ருத்ர யாகம் நடைபெற்றது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்திய மக்களின் நலம் மற்றும் அமைதிக்காக இந்த வகையான யாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக கோயில் நிர்வாகித்தனர் தெரிவித்தனர். முன்னதாக சுவாமி சிவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டது.