சோபியா விவகாரத்தில் தன் மீது எந்த தவறும் இல்லை – தமிழிசை சவுந்தரராசன்

471

சோபியாவின் நடவடிக்கையை நேரிடையாக நான்தான் பார்த்தேன் என்றும், என் மீது தவறு இருப்பது போலவும், மன்னிக்கும் குணம் இல்லாதது போலவும் பேசிக் கொண்டு இருப்பதாக தமிழிசை சவுந்தரராசன் தெரித்துள்ளார்.

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம் என்றும், விரைவில் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.