சென்னை விமான நிலையத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

157

சென்னை வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மீனம்பாக்கம் விமானநிலையத்தில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கொழும்பு செல்லும் விமானத்தில் இரண்டு பயணிகளிடம் நடத்திய சோதனையில், 40 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த கடத்தலில் தொடர்புடைய விமான நிலைய ஊழியர் உட்பட 3நபர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் சென்ற பயணியிடம் இருந்து 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த முகமது ரசாக் என்பவரிடம் அமெரிக்கா, யூரோ நாட்டு நோட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.