கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

107

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாகவும், கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்,
தென் தமிழகம், புதுச்சேரி, தெற்கு கேரளா, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. மேலும், வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சியானது வலிமைபெற்று தென்தமிழக பகுதிகளில் நிலவிவருகிறது. இதன் காரணமாக கடலோரப்பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.