சுற்றுச்சூழல் ஆய்வு தொடர்பாக மத்திய அரசும் பதில் அளிக்க வலியுறுத்தல் – சென்னை உயர் நீதிமன்றம்

110

அரசு அதிகாரிகளின் நிலத்தை கையகப்படுத்தினால் தான், விவசாயிகளின் வேதனை புரியும் என்று சேலம் 8 வழிச்சாலை தொடர்பான வழக்கில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சேலம் 8 வழிச் சாலை திட்டத்திற்காக, விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் பகுதியில் 500 மரங்கள் வெட்டப்பட்டதாகப் மனுதாரர்கள் புகார் அளித்தனர். இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், மங்களை வெட்டக் கூடாது என்ற உத்தரவை மீறினால், 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என்று எச்சரித்தனர். அரசு அதிகாரிகளின் நிலங்களை கையகப்படுத்தினால்தான் ஏழை மக்களின் நிலைமை உங்களுக்குப் புரியும் என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நில அளவீடு மற்றும் மரங்கள் வெட்டியது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்யுமாறும் அவர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், எந்த சூழ்நிலையில் மரங்கள் வெட்டப்பட்டன என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்திய உயர்நீதிமன்றம், சுற்றுச்சூழல் ஆய்வு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.