கல்வி முறையை மாற்றினால், மாணவர் தற்கொலையை தடுக்கலாம் : ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கருத்து

274

மதிப்பெண்களை நோக்கிய கல்வி முறையை மாற்ற வேண்டும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செல்போன் பயன்பாடு நன்மைக்கு எதிராக மாறிவிட்டதாக கவலை தெரிவித்தார். கல்வி சுமையால் தற்கொலை அதிகரித்துள்ளதாக கூறிய ஜக்கி வாசுதேவ், மதிப்பெண்ணை நோக்கிய கல்வி முறையை மாற்றாவிட்டால் தற்கொலைகளை தடுக்க முடியாது என்று உறுதிபட தெரிவித்தார். நாடு முழுவதும் கல்வித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு புதிய திட்டத்தை தயார் செய்து மத்திய அரசுக்கு கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கோவை, சென்னை, பெங்களூரு உட்பட நாட்டின் 15 பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேசவிருப்பதாகவும் ஜக்கி வாசுதேவ் கூறினார்.