நாளை மறுநாள் கருணாநிதி சமாதிக்கு பேரணியாக செல்லும் மு.க.அழகிரி..!

270

நாளை மறுநாள் நடைபெறும் பேரணியில் பங்கேற்பதற்காக கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி சென்னை வந்தடைந்தார்.

திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததை தொடர்ந்து, மு.க.அழகிரி மீண்டும் அக்கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என எதிர்ப்பார்ப்புகள் எழுந்தன. ஆனால் மு.க.அழகிரியை திமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என மூத்த நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் வரும் 5ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு பேரணியாக செல்லுவோம் என அதிரடியாக அறிவித்தார். அதன்படி நாளை மறுநாள் நடைபெற இருக்கும் பேரணியில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து விமானம் மூலம் அழகிரி சென்னை வந்தடைந்தார்.