சென்னை மாநகராட்சி அதிமுக உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

204

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவொற்றியூர் பகுதி அதிமுக அவைத் தலைவரும், சென்னை மாநகராட்சி 21-வது வார்டு உறுப்பினருமான முல்லை ஆர்.ஞானசேகர் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். இந்த படுகொலையை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு முறையான தண்ட னையை பெறுவது உறுதி என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஞானசேகரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.