சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் குடியுரிமை அதிகாரிகளிடம் தகராறு செய்ததால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பசுபதி ஆனந்த் என்பவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், குடியுரிமை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விமான நிலைய போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, பயணி பசுபதி ஆனந்திடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.