சென்னையில் உள்ள தனியார் பிரியாணி கடைஒன்றில் திமுக பிரமுகர் 10 பேருடன் சென்று பிரியாணி கேட்டு சண்டை போட்ட வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பிரியாணி கடையில், அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி யுவராஜ் என்பவர் 10 பேருடன் சென்று பிரியாணி கேட்டுள்ளார். அப்போது அவருக்கும் கடையில் உள்ள ஊழியர் களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியது. திமுக பிரமுகர் சண்டை போடும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது ஊடகங்களிலும் இணையதளங்களிலும் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.