தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தகவல்..!

332

தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த ராகுல்காந்தி ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் உடன் வந்தனர். இதையடுத்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் ராகுல்காந்தி கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், கருணாநிதியை தாம் நேரில் பார்த்ததாகவும், அவர் நலமுடன் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தங்களுடன் நீண்டகாலம் நட்புறவு கொண்டவர் கருணாநிதி என்றும் ராகுல் காந்தி கூறினார்.