திமுக தலைமையின் அவசர அறிவிப்பை ஏற்று, அனைத்து திமுக எம்.எல்.ஏ-கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சென்னை விரைந்துள்ளனர்..!

3597

திமுக தலைமையின் அவசர அறிவிப்பை ஏற்று, அனைத்து திமுக எம்.எல்.ஏ-கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சென்னை விரைந்துள்ளனர்.

திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 50 ஆண்டுகள் கடந்துள்ளதை அடுத்து இன்று பொன்விழா கொண்டாடப்படுகிறது. இதனிடையே, நேற்றிரவு கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது குறித்து செய்தி வெளியானதால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை திமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு திமுக தலைமை அவசர அழைப்பு விடுத்திருந்தது.

இதனை ஏற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திமுக எம்.எல்.ஏ-கள் முக்கிய பிரமுகர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், திமுக தலைமை நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக சென்னையை நோக்கி படையெடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.