டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த திருக்குறள் எக்ஸ்பிரஸ் ஆய்வில் 500 கிலோ குட்கா பறிமுதல்

141

எழும்பூர் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டும், கடைகளுக்கு விநியோகம் செய்தும் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. காவல் துறை எவ்வளவுதான் தீவிரமான நடவடிக்கை எடுத்து கைது செய்தாலும், தொடர்ச்சியாக குட்கா விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் டெல்லியிலிருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று இரவு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. ரயில் பெட்டியை ஆய்வு செய்தபோது 8 மூட்டைகள் இருந்தது கண்டெடுக்கப்பட்டது. மூட்டைகளை பிரித்து பார்த்தபோது 500 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த ஆர்.பி.எப். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.