500 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை கடத்தியதாக நேபாளத்தை சேர்ந்த 2 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

212

கடந்த 50 ஆண்டுகளாக தமிழக கோவில்களில் உள்ள புராதன சிலைகளை மர்மநபர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்துவருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சிலை கடத்தலில் ஈடுபடுவோர்களை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிலைக் கடத்தல் வழக்கில் நேபாளத்தை சேர்ந்த வல்லப்பிரகாஷ் மற்றும் அவரது மகன் ஆதித்யா ஆகிய 2 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்கள் பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.