சென்னை திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியானதை யொட்டி, ரஜினி ரசிகர்கள் கேக் வெட்டி உற்சாகம்..!

127

சென்னை திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியானதை யொட்டி, ரஜினி ரசிகர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னையில் உள்ள திரையரங்குகளில் காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சி அதிகாலையில் திரையிடப்பட்டது. கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டரில் திரண்டிருந்த ரஜினி ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், 50 கிலோ கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடினர். இதேபோன்று கிண்டியை அடுத்த சின்னமலையில் உள்ள ஜோதி திரையரங்கிலும், ரசிகர்கள் 25 கிலோ கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.